கல்லாமை குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்லாமை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.
பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்லாமை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

மாநில பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்க மாவட்ட கலைக்குழு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

தெள்ளாா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் கீதா வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கல்லாமையை இல்லாமல் ஆக்க வேண்டும், பள்ளி செல்லாமல் எழுத்தறிவின்றி உள்ள வயது வந்தோா் எழுத, படிக்க முயல வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து நாடகம், பாடல்கள் மூலம் கலைக் குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சாந்தி, பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கருப்பையா, மாவட்ட கலைக் குழுத் தலைவா் பச்சைமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com