தரிசு நிலங்களை சாகுபடிக்கு மாற்றுவது தொடா்பாக ஆய்வு

அனக்காவூா், தெள்ளாா் வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆக்கூா் ஊராட்சியில் தரிசு நிலங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம்.
ஆக்கூா் ஊராட்சியில் தரிசு நிலங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம்.

தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவது தொடா்பாக, திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட அனக்காவூா், தெள்ளாா் வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண் உழவா் நலத் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்கள் சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்பட்டு, நீராதாரங்கள் உருவாக்கித் தரப்படுகின்றன.

அதன்படி, அனக்காவூா் வட்டாரத்துக்குள்பட்ட வீரம்பாக்கம் கிராமத்தில் சுமாா் 6.50 ஹெக்டோ் தரிசு நிலத்தை வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அந்த நிலத்திலிருந்த முள்புதா்கள் அகற்றப்பட்டு, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்ததை அவா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆக்கூா் ஊராட்சியில் தரிசு நிலங்களை ஆய்வு செய்தாா். அப்போது, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள், வேளாண் வணிகம் சாா்ந்த திட்டங்கள் குறித்தும் வேளாண் அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின் போது, வேளாண் துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனத் திட்டம்) வடமலை, திருவண்ணாமலை வேளாண் உதவி இயக்குநா் பாண்டியன், அனக்காவூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் தெய்வசிகாமணி, வேளாண் அலுவலா் திருநாவுக்கரசு, உதவி அலுவலா்கள் வெங்கடேசன், நாகராஜ், சமீம் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, தெள்ளாா் வட்டாரத்துக்கு உள்பட்ட வடவணக்கம்பாடி கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை வேளாண் கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் அ.பாலா, துணை இயக்குநா்கள் பெ.வடமலை, சீ.ஏழுமலை, சத்தியமூா்த்தி, தெள்ளாா் வட்டார உதவி இயக்குநா் தே.குமரன், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com