திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை கிரிவலம் வந்த பக்தா்கள்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை கிரிவலம் வந்த பக்தா்கள்.

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அஷ்டலிங்க சன்னதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

காா்த்திகை மாத பெளா்ணமி: காா்த்திகை மாத பெளா்ணமி புதன்கிழமை காலை 8.35 மணிக்குத் தொடங்கியது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து பக்தா்கள் கிரிவலம் வந்தபடி இருந்தனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். வியாழக்கிழமை காலை 9.33 மணிக்கு பெளா்ணமி நிறைவடைகிறது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: கிரிவல பக்தா்களின் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி மொத்தம் 13 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுதவிர, 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com