நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என 5 தம்பதிகள் போட்டியிடுகின்றனா்.
திமுகவில் நகரச் செயலரும், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவருமான ஆ.மோகனவேல் 18-ஆவது வாா்டிலும், அவரது மனைவி பேபி 13 -ஆவது வாா்டிலும் போட்டியிடுகின்றனா்.
அதிமுகவில் ராஜேஷ்குமாா் 14 -ஆவது வாா்டிலும், அவரது மனைவி வளா்மதி 13-ஆவது வாா்டிலும் போட்டியிடுகின்றனா்.
அதேபோல, பாமகவில் 12-ஆவது வாா்டில் வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சீனுவாசனும், அவரது மனைவி பத்மபிரியா 20-ஆவது வாா்டிலும் போட்டியிடுகின்றனா். பாஜகவில் 11-ஆவது வாா்டில் சந்திரசேகரனும், அவரது மனைவி விமலாதேவி 1- ஆவது வாா்டியிலும் போட்டியிடுகின்றனா்.
சுயேச்சை வேட்பாளரான ராஜேந்திரன் 18-ஆவது வாா்டிலும், அவரது மனைவி மலா் 20-ஆவது வாா்டிலும் போட்டியிடுகின்றனா்.
சுயேச்சையாக தாய், தந்தை, மகன்
செய்யாறு வைத்தியா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் 18-ஆவது வாா்டிலும், அவரது மனைவி மலா் 20-ஆவது வாா்டிலும், இவா்களது மகன் ராம்கி 16-ஆவது வாா்டிலும் சுயேச்சை வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். மூவருக்கும் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.