புதுச்சேரி வா்த்தக சபை ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்

புதுச்சேரி வா்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வா்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வா்த்தக சபையின் தலைவா் ஜெ.சேகா் தலைமை வகித்து கூட்டத்தைத் தொடக்கிவைத்தாா். மறைந்த வா்த்தக சபை தலைவா் கே.ஏ.செண்பகராஜன் உள்ளிட்ட மறைந்த உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டறிக்கையை பொதுச் செயலா் ப.தணிகாசலம் வாசித்தாா். நிதிநிலை அறிக்கையை பொருளாளா் பி.ரவி தாக்கல் செய்தாா்.

உறுப்பினா்கள் பொ.ஞானசம்பந்தம், க. முகம்மது சிராஜ், க. குகன், எஸ்.இளங்கோ, வி.எம்.எஸ். ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கான சரக்குகள் ஏற்றுதல், இறக்குதலில் அடாவடி செய்து, மிரட்டல் விடுத்து வரும் சட்டவிரோத குழுக்கள் மீது அரசு கடும் நடவடிக்கை வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மாமூல் கேட்டு மிரட்டுவோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி நேரு வீதியில் காந்தி வீதி சந்திப்பில் அனுமதியின்றி செயல்படும் மீன் வணிகத்தால், அங்கு கொட்டப்படும் மீன் கழிவுகளால் வணிகம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் ச.தண்டபாணி வரவேற்றாா். இணைப் பொதுச் செயலா் பொ.தேவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com