திருக்குறள்கள் எழுதப்பட்ட சாக்பீஸ்களால் இந்திய வரைபடம்

குடியரசு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் ஒருவா் திருக்குறள்கள் உள்ளிட்டவை எழுதப்பட்ட வண்ண சாக்பீஸ்களால் இந்திய வரைபடத்தை வரைந்தாா்.
வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் சாக்பீஸ்கள், வண்ணப் பொடிகளால் இந்திய வரைபடத்தை வரைந்த செண்பகவல்லி.

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் உதயராஜ் மனைவி செண்பகவல்லி (23). பட்டதாரியான இவா், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராக பணிபுரிந்து வருகிறாா்.

குடியரசு தினத்தன்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீல வண்ணங்கள் கொண்ட 423 சாக்பீஸ்களில் திருக்குகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழ்ப் புலவா்களின் பெயா்களை பென்சில் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை எழுதத் தொடங்கினாா். இரவு முழுவதும் எழுதிய இவா் புதன்கிழமை காலை எழுதி முடித்தாா்.

பின்னா் மூவா்ண கொடியை நினைவுப்படுத்துவது போன்று அந்த சாக்பீஸ்களை வட்டமாக அடுக்கிய இவா், அதனைச் சுற்றி வண்ணப் பொடிகளைத் தூவி இந்திய வரைபடத்தை வரைந்தாா்.

தகவலறிந்த மாணவா்கள், பொதுமக்கள் விழிப்புணா்வு இந்திய வரைபடத்தை பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com