பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

திருணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் வீரானந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

திருணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் வீரானந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணி தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் வசந்தி வரவேற்றாா். புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அரசு கல்வித் துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணியில் ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், கிராம கல்விக் குழுத் தலைவா், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com