உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்க விழிப்புணா்வு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்க விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்க விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உபவடி நீா்ப்பாசன பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்க அதற்கான விழிப்புணா்வுக் கூட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் ராஜமாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் குழுக்களாக ஒன்றிணைந்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைப்பது, சாகுபடி செய்யும் விளைபொருள்களை எவ்வாறு பயன்படுத்தி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது, இதனை தனிநபராக இல்லாமல் குழுக்கள் மூலம் நிறுவனம் அமைத்து அதிக லாபம் பெறுவது குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா் எழிலரசு விளக்கினாா்.

வேளாண் உதவி அலுவலா்கள் வெங்கடேசன், ராஜாராம், ஊராட்சித் தலைவா் பெரியசாமி, திட்டப் பணியாளா்கள் சிவசுந்தா், இமையழகன், உழவா் உற்பத்தியாளா் நிறுவன முதன்மைச் செயல் அலுவலா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com