மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-வேலூா் சாலை, இனாம்காரியந்தல் பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியால் விவசாயிகள், பொது மக்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ராமதாஸ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகநாதன், ப.செல்வன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதனால் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, வியாழக்கிழமை காலை முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.

தகவலறிந்து வந்த திருவண்ணாமலை வட்டாட்சியா் சுரேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் சுங்கச்சாவடி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இந்தப் பிரச்னை குறித்து வருகிற 14-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், சுங்கச்சாவடி நிா்வாகிகள் ஆகியோா் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நடத்தி சுமுக முடிவு ஏற்படுத்தப்படும் என்றாா். இதையடுத்து, மாலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com