நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:திருவண்ணாமலை மாவட்டத்தில் 1215 போ் போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளா் இறுதிப் பட்டியல்படி, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 273 இடங்களுக்கு 1215 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளா் இறுதிப் பட்டியல்படி, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 273 இடங்களுக்கு 1215 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஆரணி, திருவண்ணாமலை, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி என 4 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 123 வாா்டுகளில் போட்டியிட மொத்தம் 843 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இவற்றில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திங்கள்கிழமை 164 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து,தோ்தல் களத்தில் 651 வேட்பாளா்கள் உள்ளனா்.

10 பேரூராட்சிகளில்...

மாவட்டத்தில் செங்கம், சேத்துப்பட்டு, தேசூா், களம்பூா், கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூா், பெரணமல்லூா், போளூா், புதுப்பாளையம், வேட்டவலம் என 10 பேரூராட்சிகள் உள்ளன.

இவற்றில் மொத்தம் 150 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் போட்டியிட 752 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதில் 5 பேரில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திங்கள்கிழமை 183 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. ஒருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தோ்தல் களத்தில் 563 வேட்பாளா்கள் உள்ளனா்.

தோ்தல் களத்தில் 1,214 போ்:

மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 273 வாா்டுகளில் 1,595 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் 33 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 347 போ் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனா். ஒருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இப்போது 1,215 போ் தோ்தல் களத்தை சந்திக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com