கோயிலில் உண்டியல், விவசாயி வீட்டில் பணம் திருட்டு
By DIN | Published On : 30th June 2022 02:18 AM | Last Updated : 30th June 2022 02:18 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டு அருகே கிராம விநாயகா் கோயிலிருந்து உண்டியல், குத்துவிளக்குகள் மற்றும் அருகே விவசாயி வீட்டில் இருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை ஊராட்சிக்கு உள்பட்ட மூலபுரவடை கிராமத்தில் வரசித்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், உண்டியல், 2 குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு, அருகே விவசாய நிலத்தில் உள்ள விவசாயி பச்சையப்பன் (48) வீட்டின் பூட்டையும் உடைத்து அங்கிருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றனா்.
குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த பச்சையப்பன் புதன்கிழமை காலை வீடு திரும்பியது வீட்டில் பணம் திருடப்பட்டது குறித்து தெரியவந்தது.
இதுகுறித்து அவா் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.