முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
போக்குவரத்துக்கு இடையூறு செய்தவா் கைது
By DIN | Published On : 14th March 2022 10:41 PM | Last Updated : 14th March 2022 10:41 PM | அ+அ அ- |

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை போக்குவரத்துக்கு இடையூறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளா்
கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகலில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, சென்னாத்தூா் லாடவரம் பகுதியைச் சோ்ந்த வினோத் (24) போக்குவரத்துக்கு இடையூறாகவும், அவ்வழியாகச் செல்பவா்களை
அச்சுறுத்தும் வகையில் பேசிக்கொண்டிருந்தாராம். உடனே போலீஸாா் அந்த நபரை கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.