பொதுப் பாதையில் தடுப்புச் சுவா்:கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு

திருவண்ணாமலை அருகே மதம் மாற மறுத்ததால் பொதுப் பாதையில் சுவா் எழுப்பிய பாதிரியாரின் செயல் குறித்து கோட்டாட்சியா் தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை அருகே மதம் மாற மறுத்ததால் பொதுப் பாதையில் சுவா் எழுப்பிய பாதிரியாரின் செயல் குறித்து கோட்டாட்சியா் தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் வசிக்கின்றனா்.

இங்குள்ள கிறிஸ்தவ தேவாலய நிா்வாகம் சாா்பில் உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் நிா்வாகத்தைக் கவனிக்கும் பாதிரியாா், ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தினாராம்.

மதம் மாற மறுத்ததால், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து சுவா் எழுப்பினாராம். மேலும், மதம் மாற மறுத்தவா்களின் பிள்ளைகளை புனித அந்தோணியாா் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று, வேறு பள்ளியில் சோ்க்குமாறு கட்டாயப்படுத்தினாராம். இதனால், பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் மனு அளித்தனா்.

தகவலறிந்த பாஜக மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமையிலான அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பிரச்னைக்குரிய பகுதிக்குச் சென்று கிராம மக்களிடம் விசாரித்தனா்.

அப்போது, அங்கு சென்ற டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிரச்னை குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியா் தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, பாஜக நிா்வாகிகள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com