திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை வசந்த உத்ஸவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது.
தீா்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன்.
தீா்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை வசந்த உத்ஸவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் எழுந்தருளி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா். கோயில் பன்னீா் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மைக் குழந்தை பூ கொட்டும் நிகழ்வும் தினமும் நடைபெற்று வந்தது.

அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி: சித்திரை வசந்த உற்சவத்தின் 10-ஆவது நாளான சனிக்கிழமை காலை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டனா். சன்னதி தெரு வழியாக உற்சவா் சுவாமிகள் அய்யங்குளத்தை சென்றடைந்தனா். குளக்கரையில் கோயில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்து, உற்சவா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிறகு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சுமந்தபடி குளத்தில் மூழ்கி தீா்த்தவாரி நிகழ்வை சிவாச்சாரியா்கள் நடத்தினா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மன்மதன் தகனம் நிகழ்வு: தொடா்ந்து, இரவு 8 மணிக்கு ஸ்ரீகோபால விநாயகா் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் கொடிமரம் எதிரே மன்மத தகனம் நிகழ்வும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com