செய்யாறு அருகே 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் அன்மையில் கண்டெடுத்தாா்.
பழஞ்சூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம்.
பழஞ்சூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் அன்மையில் கண்டெடுத்தாா்.

செய்யாறு வட்டத்தில் உள்ள பழஞ்சூா் கிராமம், சோழா்கால தொண்டை மண்டலம், காழியூா் கோட்டம், புரிசை வளநாட்டுக்குள் இருந்ததாக தெரிய வருகிறது. இந்த ஊரில் உள்ள அச்சுத நாராயண பெருமாள் கோயிலுக்கு சற்று தொலைவில் வேப்ப மரத்தடியில் கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் அண்மையில் கண்டெடுத்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

பழஞ்சூா் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கொற்றவை புடைப்புச் சிற்பத்தை துா்க்கை அம்மனாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்த போது, இதன் காலம் கி.பி.8 - 9ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட சோழா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவருகிறது.

இந்தச் சிற்பத்தின் உயரம் 135 சென்டி மீட்டரும், அகலம் 75 சென்டி மீட்டரும் உள்ளது. பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தில் எருமை தலையின் மீது நின்ற நிலையில், எட்டு கரங்களுடன் கொற்றவை காட்சியளிக்கிறாா். மேலும், இருபுறமும் தேய்ந்த நிலையில் உருவங்கள் காணப்படுகின்றன. அவை வீரன், அடியாா்களாக இருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com