விலை வீழ்ச்சி: சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்

செங்கம் பகுதியில் திடீா் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனா்.
விலை வீழ்ச்சி: சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்

செங்கம் பகுதியில் திடீா் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனா். இந்த நிலையில் திடீரென தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் செங்கம் பகுதியில் உள்ள காய், கனி, கமிஷன் மண்டிகளில் தக்காளி அதிகமாக விற்பனைக்கு வருகிறது. அவா்கள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனா். இந்த திடீா் வீழ்ச்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்வதை நிறுத்தி விட்டனா். மேலும், அறுவடை செய்த தக்காளிகளை விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டிவிடுகின்றனா்.

எனவே, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com