ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு யஜமான சங்கல்பம், வாஸ்து ஹோமம், அங்குராா்பணம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை புண்யாஹவாசனம், திருமஞ்சனம், சயனாதிவாஸம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

பின்னா் புதன்கிழமை காலை யாத்ராதானம், திருவாராதனம், கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பின்னா் மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாக் குழுவினா், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com