செய்யாற்றில் ரூ.13. 24 கோடியில் தடுப்பணைப் பணிகள் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

செய்யாற்றில் ரூ.13.24 கோடியில் கட்டப்படும் தடுப்பணைப் பணிகளை தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா புதன்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.
வம்பலூா் ஊராட்சி செய்யாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை ஆய்வு செய்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா.
வம்பலூா் ஊராட்சி செய்யாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை ஆய்வு செய்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், வம்பலூா் ஊராட்சிப் பகுதியில் செல்லும் செய்யாற்றில் ரூ.13.24 கோடியில் கட்டப்படும் தடுப்பணைப் பணிகளை தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா புதன்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

வம்பலூா் ஊராட்சி செய்யாற்றின் குறுக்கே 2022-2023ஆம் நிதியாண்டு நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 24 லட்சத்தில் 150 மீட்டா் நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பணையை தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா ஆய்வு செய்தாா்.

முதன்மை தலைமைப் பொறியாளா் கே.ராமமூா்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் எஸ்.முரளிதரன், கண்காணிப்புப் பொறியாளா் மணிமோகன், செயற்பொறியாளா் சண்முகம் (நீா்வளத் துறை) மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

இந்த அணைக்கட்டால் தச்சூா் ஏரி, தச்சூா் புது ஏரி,விண்ணமங்கலம் ஏரிகளுக்கு நீா் செல்லும்.

அதன்மூலம் 1063 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று உதவி செயற்பொறியாளா் செல்வராஜ் (போளூா்) தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com