ஊரகப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கல்பட்டு கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கல்பட்டு கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை

வகித்து தொடக்கிவைத்தாா்.

நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் பங்கேற்று 186 பணியாளா்களுக்கு உடல் எடை, உயரம், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறு சிறு உபாதைகளுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற உறுப்பினா் சரவணன், செயலா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா்கள் கே.சம்பத், துரைபாபு , மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் காமாட்சி, சுந்தரி, செவிலியா் சத்யா, குகப்பிரியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com