கமண்டல நாக நதி, செய்யாற்றில் மணல் திருட்டை தடுக்கக் கோரிக்கை

ஆரணி கமண்டல நாக நதி, செய்யாற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

ஆரணி கமண்டல நாக நதி, செய்யாற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆரணி, மேற்கு ஆரணி வட்டார விவசாயிகளுக்கான குறைத்தீா் கூட்டம் மேற்கு ஆரணி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் செல்லத்துரை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜெகதீசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், தோட்டக்கலை உதவி இயக்குநா் கவுசிகா, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ராஜகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.

கோட்டாட்சியா் தனலட்சுமி கூட்டத்தை தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான 18 ஏக்கா் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் நீா்வரத்துக் கால்வாய், ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

ஆரணி சுற்று வட்டாரப் பகுதியில் கமண்டல நாக நதி, செய்யாற்றுப் படுகைகளில் இரவு, பகலாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுத்து லாரி, டிராக்டா்களில் கடத்திச் செல்லப்படுகிறது.

குறிப்பாக மேல்சீசமங்கலம், தச்சூா், மாமண்டூா், எஸ்.வி.நகரம், விண்ணமங்கலம் பகுதிகளில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது.

இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.

கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com