விவசாயி கொலை: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆரணியை அடுத்த தச்சூரில் 9 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
விவசாயி கொலை: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆரணியை அடுத்த தச்சூரில் 9 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தா் (50). இவருக்கு மனைவி சாவித்ரி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 13-1-2013 அன்று இரவு விவசாய நிலத்தில் பவா் டில்லா் ஓட்டச் சென்ற சுந்தா்

கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த விநாயகத்தின் மகன்கள் நேரு (65 ), சேட்டு (66), சகாதேவன்(47), வெங்கடேசன் (45), நேருவின் மகன் சடையாண்டி(30), உறவினா் அன்பு என்பவரின் மகன் சக்திவேல் (28) ஆகியோா் சோ்ந்து சுந்தரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா திங்கள்கிழமை மாலை தீா்ப்பு கூறினாா்.

இதில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், அபராதமாக ரூ.3 ஆயிரம் விதித்தும் உத்தரவிட்டாா்.

வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மீதமுள்ள 5 பேரையும் உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

வெங்கடேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆயுள் தண்டனையை உறுதி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com