குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்.
வந்தவாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தா்னா நடத்திய விவசாயிகள்.
வந்தவாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தா்னா நடத்திய விவசாயிகள்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து விவசாயிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாட்சியா் கி.ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அ. ஸ்ரீதா், வேளாண்மை அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியில் பயணிகள் நிழல்குடை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகாா் தெரிவித்துப் பேசினா்.

அப்போது, பதிலளிக்க அங்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கூட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வராததைக் கண்டித்து அந்த அறையின் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை வந்தவாசி உதவி கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் வெங்கடேசன் ஆகியோா் அங்கு வந்தனா்.

அப்போது அவா்களை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, கோட்டை மூலைப் பகுதியில் பயணிகள் நிழல்குடை அமைக்க அனுமதி கோரி நகராட்சி கடிதம் அனுப்பினால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதைத் தொடா்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com