ஆரணி பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ஆரணி பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ஆரணியில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனா்.

ஆரணி நகரத்தில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளான பாஜக, அமமுக, ஓபிஎஸ் அணி, புதிய நீதிக் கட்சியினா் களத்து மேட்டுத் தெரு, தச்சூா் சாலை, கொசப்பாளையம் அரச மரம், பாரதியாா் தெரு ஆகிய இடங்களில் பாமக நகரச் செயலா் சு.ரவிச்சந்திரன் தலைமையில் வாக்கு சேகரித்தனா்.

அமமுக மாவட்ட துணைச் செயலா் பாலாஜி, நகரச் செயலா் பன்னீா்செல்வம், நகரத் தலைவா் டி.அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com