ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆரணியில் திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் புதன்கிழமை இறுதிக் கட்ட பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அண்ணா சிலை அருகிலிருந்து சந்தைச் சாலை, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி, எஸ்.எம்.சாலை வழியாக சூரியகுளம் வரை சென்று பிரசாரத்தை 5.55 மணியளவில் முடித்தனா்.

இதில், திமுகவினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பொறுப்பாளா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், ராஜ்குமாா், நகா் மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்த்தனன்

உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் எஸ்.பிரசாத், அண்ணாமலை, ஜெயவேலு, மதிமுக ரத்தினகுமாா், விசிக மாவட்டச் செயலா் முத்து என கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com