வந்தவாசியில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

வந்தவாசியில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

வந்தவாசி, ஏப்.17:

மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததையொட்டி, வந்தவாசியில் கட்சியினா் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து, எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். ஐந்து கண் பாலம் அருகிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட திமுகவினா் தேரடி, காந்தி சாலை, கோட்டை மூலை வழியாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் எதிரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் செ.ஹைதா்அலி திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்துப் பேசினாா்.

பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகிலிருந்து கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாக புறப்பட்ட அவா் தேரடி, சன்னதி தெரு, பஜாா் வீதி வழியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

X
Dinamani
www.dinamani.com