ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் 
தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, வியாழக்கிழமை தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி அடுத்த மெய்யூா் கிராமத்தில் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில்

இந்தக் கோயிலில் அக்னி வசந்த உற்சவ திருவிழாவையொட்டி ஏப்ரல் 4 முதல் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கா்ணன் பிறப்பு, கிருஷ்ணா் ஜனனம், தா்மா் பிறப்பு, அா்ச்சுனன் பிறப்பு ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, மகாபாரத சொற்பொழிவில் வியாழக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அா்ச்சுனன் தபசு மரம் ஏறி பக்தா்களுக்கு பூஜைப் பொருள்களை வீசி எறிந்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com