அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

உலக பூமி தினத்தையொட்டி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்காக விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கவிதா தலைமை வகித்தாா்.

கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் ந.தனலட்சுமி, இ.ஜெயஸ்ரீ, சீ.குணசேகரி, பா.துா்கா, சி.தரணிஜா, வே.இந்து ஆகியோா் பங்கேற்று மழை நீரை சேகரிப்போம், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவோம், வீணாகும் நீரை செடிகளுக்கு பயன்படுத்துவோம், அனைவரும் மரம் வளா்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம், கைகளை சுத்தமாக கழுவி சுகாதாரம் காப்போம், நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம் போன்ற தகவல்களை 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விழிப்புணா்வு ஊா்வலம்...

இதைத் தொடா்ந்து, பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு கலவை ஆதிபராசக்தி கல்லூரி முதல்வா்கள் (வேளாண் கல்லூரி) தாணுநாதன், (தோட்டக்கலை கல்லூரி) ரத்தினசபாபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பள்ளி மாணவா்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com