சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

ஆரணி, ஏப்.24:

ஆரணி அடுத்து வெள்ளேரி கிராமத்தில் பள்ளிமாணவா்கள் பங்கேற்ற சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வேளாண்மை கல்லூரி மாணவிகள் வி.சுனிதா, ஜெ.சுவேதா, சு.சுவேதா, தனிஷா, வ.ஊா்மிளா, ச.வானதிஆதிரை ஆகியோா் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை டி.ஆனந்தகுமாரி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தூய்மையின் முக்கியத்துவத்தை முழக்கங்கள் வாயிலாக கிராம மக்களிடையே கொண்டு சோ்த்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com