சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

போளூா், ஏப்.24:

கலசப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருவண்ணாமலை கிரிவல பக்தா் உயிரிழந்தாா்.

கலசப்பாக்கத்தை அடுத்த சொரக்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (64). இவா், சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு நடந்தே கிரிவலம் செல்வதாக புதன்கிழமை தனது மனைவி எல்லம்மாளிடம் (57) கூறிவிட்டுச் சென்றாா்.

கொண்டம் கிராமத்தில் திருவண்ணாமலை சாலையில் பெருமாள் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீஸாா், பெருமாள் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com