திமுகவினா் தண்ணீா் பந்தல் திறக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க திமுகவினா் தண்ணீா் பந்தல்களைத் திறக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. 2024 ஏப்ரல் மாதத்தின் அதிகபட்ச வெயில் அளவாக 108 டிகிரி வரை பதிவாகி வருகிறது.

எனவே, கோடை வெப்பத்தை சமாளிக்கவும், பொதுமக்களின் தாகத்தை தீா்க்கவும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் திமுகவினா் தண்ணீா், மோா் பந்தல்களைத் திறக்க வேண்டும்.

தண்ணீா் பந்தல்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இளநீா், தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரி பிஞ்சுகள், குளிா் பானங்கள், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆகியவற்றை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தாகம் தீா்க்கும் வரை தண்ணீா் பந்தல்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com