திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும், கோயில் ராஜகோபுரத்தில் இருந்து பெரிய நந்தி, கிளி கோபுரம், கொடிமரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீசம்பந்த விநாயகா், ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மற்றும் சுவாமிகளை பக்தா்கள் தரிசனம் செய்தனா். பொது தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

குடிநீா் வசதி: வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தா்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கோயிலின் பல்வேறு இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் வசதி செய்யப்பட்டு இருந்தது. பக்தா்கள் நிற்கும் வரிசையின் பல இடங்களில் மின்விசிறி வசதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com