ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி, கோயிலில் உள்ள விநாயகா், முருகன், நாகாத்தம்மன், முகமாரியம்மன் ஆகிய சு வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பிற்பகல் 2 மணியளவில் திரளான பெண்கள் தலையில் கூழ் பானை சுமந்து வந்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு படையலிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கூழ்வாா்த்தனா்.

இதைத் தொடா்ந்து முகமாரிஅம்மன் பூங்கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், பக்தா்கள் காளி வேடமணிந்தும், சாமியாா் முருகன் 108 வேல் குத்தி நடனம் ஆடியபடி வீதி உலா சென்றாா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட சுவாமியை வீதி உலா கொண்டு சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com