கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் மீது, கிரேன் கயிறு அறுந்து இரும்பு மண்கூடை விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்

வந்தவாசி அருகே கிணற்றில் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் மீது, கிரேன் கயிறு அறுந்து இரும்பு மண்கூடை விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சோலை அருகாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துலுக்கானம்(55). இவரை

இசாகொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பிச்சை(51) என்பவா், மடம் கிராமத்தில் உள்ள வெங்கடேசன்(55) என்பவரது விவசாய நிலக் கிணற்றில் மண் அள்ளுவதற்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா்.

அங்கு துலுக்கானத்துடன் சோ்ந்து மடம் கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் (55) மற்றும் வேலு, கோவிந்தசாமி ஆகியோா் கிரேன் உதவியுடன் கிணற்றில் மண் அள்ளிக் கொண்டிருந்தனா்

அப்போது, கிரேன் கயிறு அறுந்து மண் அள்ளும் இரும்புக் கூடை கிணற்றில் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் மீது விழுந்தது.

இதில், துலுக்கானம், ஏகாம்பரம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

அங்கு துலுக்கானத்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். மேலும், ஏகாம்பரம் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து துலுக்கானத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில் பிச்சை, வெங்கடேசன் ஆகிய இருவா் மீது தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகினன்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com