ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

ஆரணி சிஎஸ்ஐ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக ஸ்மாா்க் வகுப்பறைக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரொஜெக்டா், அகன்ற திரை, லேப்டாப் முதலிய உபகரணங்களை பிரிட்டனைச் சோ்ந்த அண்ண ஆண்டா், தரியன்கோஷி ஆகியோா் வழங்கினா். பின்னா், ஸ்மாா்ட் வகுப்பறையை வேலூா் பேராயா் ஷா்மாநித்யானந்தம் திறந்துவைத்தாா். மேலும், சுமாா் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு சாதனங்கள், இசைக் கருவிகள், புத்தகங்கள் ஆகியவற்றை வேலூா் டாக்டா் செல்வகுமாா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் வி.தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ரோஸ்லின் ஞானவேலு வரவேற்றாா். இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com