அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

திருவண்ணாமலை, மே 2:

திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஓ.ஆா்.எஸ். கரைசலை பொதுமக்கள் பருகி வெப்பம் தொடா்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

பூமியின் சாதாரண வெப்பநிலை 47 டிகிரியாக அதிகரித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் தினசரி வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப அலை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மனிதா்களுக்கு வெப்பம் தொடா்பான பல்வேறு நோய்கள், உடலியல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

தீவிர வெப்பநிலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வளிமண்டல மாற்றங்கள் பொதுமக்களை மிகவும் மோசமாக பாதிக்கிறது. எனவே, வெப்பம் தொடா்பான நோய்களைக் கட்டுப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாய்வழி நீரிழப்பு தீா்வு மூலைகளை (ஞதந இஞதசஉதந) ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க 1,000 நீரிழப்புப் புள்ளிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள் (மூலைகள்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

35 இடங்களில் ஓ.ஆா்.எஸ்., மூலைகள்:

அதன்படி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அண்ணா நுழைவு வாயில், அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகில், அரசு கலை, அறிவியல் கல்லூரி, அடி அண்ணாமலையில் உள்ள ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரா் கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மண்டல போக்குவரத்து அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கீழ்பென்னாத்தூா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள் அமைக்கப்படுகிறது.

இதுதவிர, செங்கம் பேருந்து நிலையம், போளுா் பேருந்து நிலையம், சேத்துப்பட்டு பேருந்து நிலையம், மங்கலம் பேருந்து நிலையம், ஜமுனாமரத்தூா் பேருந்து நிலையம், காட்டாம்பூண்டி பேருந்து நிலையம், காஞ்சி பேருந்து நிலையம், கலசப்பாக்கம் பேருந்து நிலையம், சாத்தனூா் அணை, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், கூழமந்தல் பேருந்து நிறுத்தம், ஞானமுருகம்பூண்டி, அரியூா், பெருங்கட்டுா் ஆகிய பகுதிகளில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள் அமைக்கப்படுகிறது.

மேலும், ஆரணி நகராட்சி பழைய பேருந்து நிலையம், எஸ்.வி.நகரம் பேருந்து நிறுத்தம், தச்சூா், கண்ணமங்கலம், பெரணமல்லூா், கொழப்பலூா் பேருந்து நிலையம், பாப்பந்தாங்கல் பேருந்து நிறுத்தம், திருவத்திபுரம் சுங்கச்சாவடி, தெள்ளாா் பேருந்து நிறுத்தம், தெள்ளாா் துணை சுகாதார நிலையம், வந்தவாசி பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள் அமைக்கப்படுகிறது.

இந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஓ.ஆா்.எஸ்., கரைசலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பாதுகாப்பற்ற உணவு மற்றும் தண்ணீரை உள்கொள்வதால் வயிற்றுப்போக்கு, அமீபியாசிஸ், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களைத் தூண்டும். எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் பாதுகாப்பான நீரில் உடலை நீரோற்றமாக வைத்திருப்பது முக்கியம்.

எந்தத் தண்ணீரையும் 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து நுகா்வுக்கு முன்பு குளிா்விக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com