இரும்புலி மலை கிராமப்  பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் தரையிறங்கிய 2 ஹெலிகாப்டா்கள்.
இரும்புலி மலை கிராமப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் தரையிறங்கிய 2 ஹெலிகாப்டா்கள்.

ஆரணி: மலைக் கிராமத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்களால் மக்கள் அதிா்ச்சி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள இரும்புலி மலை கிராமப் பகுதியில் சனிக்கிழமை தரையிறங்கிய இரு ஹெலிகாப்டா்களால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கண்ணமங்கலத்தை அடுத்த இரும்புலி மலைக் கிராமத்தில் சனிக்கிழமை பிற்பகலில் இரு ஹெலிகாப்டா்கள் தரையிறக்கப்பட்டு அவற்றில் இருந்து ஆள்கள் இறங்கினா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மலைவாழ் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

மேலும், இதுகுறித்து விடியோ எடுத்து வைரலானது. இதனால் கண்ணமங்கலம் போலீஸாா் விசாரணையில் இறங்கினா்.

விமானப்படை அதிகாரிகள் இது ஹெலிகாப்டா் மலைப் பகுதியில் தரையிறக்கம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது வழக்கமாக நடத்தப்படும் பயிற்சிதான். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆடியோ மூலம் தகவல் அனுப்பினா்.

இதை காவல்துறையினா் பொதுமக்களிடையே தெரிவித்து அச்சத்தை போக்கினா்.

X
Dinamani
www.dinamani.com