தமிழகத்தில் உள்ள டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக். பள்ளிகளின் தலைவரும், தமிழ்நாடு கம்ம மகாஜன சங்கத் தலைவருமான வி.கெங்குசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரக்கோணம் வி.ஜி.என். மெட்ரிக். பள்ளி நிர்வாக அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் செயலாளர் கே.எம்.தேவராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் தனபால் அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கடரமணா, நரசிம்மலு, கே.எம்.பி.ஜனார்த்தனன், சந்திரமெளலி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.