நாளை பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

அண்ணா பிறந்த நாளையொட்டி, திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற உள்ளன.

அண்ணா பிறந்த நாளையொட்டி, திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற உள்ளன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட திமுக செயலாளர்கள் ஆர்.காந்தி (கிழக்கு), எ.பி.நந்தகுமார் (மத்திய), ம.முத்தமிழ்ச்செல்வி (மேற்கு) ஆகியோர் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை:
திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள உயர், மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வேலூர் சங்கமம் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளன.
பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: அகிலமே வியக்கும் அண்ணாவும், கலைஞரும், பகுத்தறிவு பாதையில் தந்தை பெரியாரும், கலைஞரும், மக்கள் நலனில் மு.க.ஸ்டாலின். இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் 7 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும்.
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு: மாணவர்கள் நலனில் அண்ணாவும், கலைஞரும், மொழிப் போரில் திமுக. இதில், ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல்
எழுத வேண்டும்.
கவிதைப் போட்டிக்கான தலைப்பு: 15.09.1975 அன்று அண்ணா கவியரங்கில் கருணாநிதி எழுதிய தலைமைக் கவிதை, புறநானூற்று தாய் -3 எனும் தலைப்பில் கருணாநிதி எழுதிய கவிதை.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2.500, ஆறுதல் பரிசு ரூ. 1000 வீதம் 10 பேருக்கு வழங்கப்படும்.
எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மாணவ, மாணவிகளை இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆவன செய்யுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com