சிறப்பாசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 800-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது கல்விச்சான்றிதழ் உண்மையானதா எனக் கண்டறியும் பணி அனைத்து கல்வி மாவட்டங்களிலும் திங்கள்கிழமை தொடங்கியது. வேலூர் கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதல் நாளான திங்கள்கிழமை ஓவிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை மாவட்டக் கல்வி அதிகாரி புலேந்திரன் தலைமையில் அதிகாரிகள் சரிபார்ப்பு மேற்கொண்டனர். இந்தப் பணி தொடர்ந்து 4 நாள்களுக்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com