அரக்கோணத்தில் விரைவில் பலவகை சொத்துக் கடன் சேவை மையம் திறப்பு: பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் தகவல்

அரக்கோணத்தில் விரைவில் பாரத ஸ்டேட் வங்கியின் பலவகை சொத்துக் கடன் சேவை மையம் திறக்கப்பட உள்ளது

அரக்கோணத்தில் விரைவில் பாரத ஸ்டேட் வங்கியின் பலவகை சொத்துக் கடன் சேவை மையம் திறக்கப்பட உள்ளது என்று வங்கியின் சென்னை, புதுச்சேரி மாநில பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் தெரிவித்தார்.
அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு வாராக் கடன் வசூல் முகாமைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடு பொதுமக்களின் தேவைக்கேற்ப சிறப்பாக உள்ளது. தேவைப்படும் இடங்களில் கிளைகளைத் திறந்து வைத்தும், தமிழகமெங்கும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களை திறந்து வைத்தும் சேவை புரிந்து 
வருகிறது. 
தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வசூல் குறிப்பாக வாராக் கடன் வசூல் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பல கிளைகளில் வசூல் முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டிகளில் வங்கி சட்ட விதிகளுக்கேற்ப தள்ளுபடி செய்து, அசலை வசூல் செய்து வருகிறோம். மேலும், தங்களது தந்தை, தாய் ஆகியோர் பெற்ற கடன்களைத் தீர்க்கும் வாரிசுதாரர்களுக்கு இக்கடன் தீரும் நிலையில் மேலும் கடன்களும் வழங்குகிறோம். 
வங்கியின், பாரத பிரதமரின் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஓய்வூதிய தொகைக்கான அரசு உத்தரவாதத்துடன் செயல்படுத்தப்
படும் இத்திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர், விவசாயி, வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் அனைவரும் 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறலாம்.
மேலும் அரக்கோணத்தில் விரைவில் பலவகை சொத்துக் கடன் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. 
இதன் மூலம் அரக்கோணம், தக்கோலம், சோளிங்கர், நாகவேடு, போலிப்பாக்கம் ஆகிய கிளைகளில் கடன்கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, கடன்கள் விரைவில் அளிக்க முடியும் என்றார் அவர்.
முன்னதாக அரக்கோணம் கிளைக்கு வந்த பொது மேலாளரை அரக்கோணம் கிளை முதன்மை மேலாளர் ரகுநாதன் வரவேற்றார். 
பொது மேலாளருடன் துணைப் பொது மேலாளர் குமார் ரகுராமன், வேலூர் மண்டல மேலாளர் எஸ்.சேதுமுருகதுரை, சென்னை மண்டல முதன்மை மேலாளர் (கடன்கள்) புவனேஸ்வரி ஆகியோரும் வந்திருந்தனர்.  தொடர்ந்து, வங்கி வளாகத்தினுள் "எக்ஸ்பிரஸ் கோல்ட் லோன் பாயிண்டையும்' ஷெர்லி தாமஸ் திறந்து வைத்தார். 
இந்நிகழ்ச்சியில், சோளிங்கர் கிளை மேலாளர் முத்துசாமி, துணை மேலாளர்கள் முத்துசெல்வி (அரக்கோணம்), சிவபாக்கியலட்சுமி (சோளிங்கர்), வெ.ராஜதுரை (நாகவேடு), போளிப்பாக்கம் கிளை உதவி மேலாளர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com