விஐடியில் ரோபோ, ரேஸ் கார் தொழில்நுட்பங்களின் செயல்விளக்கம்

விஐடியில் நடந்து வரும் கிராவிடாஸ் சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப, மேலாண்மை திருவிழாவின் 

விஐடியில் நடந்து வரும் கிராவிடாஸ் சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப, மேலாண்மை திருவிழாவின் 
2-ஆம் நாள் நிகழ்வில் ரோபோக்கள், ரேஸ் கார்களின் தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. 
கிராவிடாஸ் எனும் சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப, மேலாண்மை திருவிழா விஐடியில் நடந்து வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த  சுமார் 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள இதன் 2-ஆம் நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
இதில், ரோபோ வார்ஸ் எனும் இயந்திர மனிதர்கள் வடிவமைப்பு நிகழ்வை இந்தியாவுக்கான ஆர்ஜென்டீனா நாட்டின் தூதர் டேனியல் சுபரு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 26 உயர்கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள் உருவாக்கிய ரோபோ வடிவமைப்புகளை செயல் விளக்கத்துடன் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.
மற்றொரு நிகழ்வாக ஆர்.சி.பாஜா எனும் ரேஸ் கார் வடிவமைப்பு போட்டியும் நடைபெற்றது. அமெரிக்கா இயந்திரவியல் பொறியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இதில் தேசிய தொழில்நுட்ப மையங்கள், அண்ணா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், விஐடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15  குழுவினர் தாங்கள் வடிவமைத்த ரேஸ் கார்களை இயக்கிக் காட்டினர்.
மேலும், விஐடி தொழில்நுட்ப அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் நீர்ஆதாரங்கள் எனும் தலைப்பில் இந்தியாவுக்கான ஆர்ஜென்டீனா தூதர் டேனியல் சுபுரு, நிலையான வேளாண் உற்பத்திக்கு இயற்கைஆதாரங்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில் ஊட்டியில் உள்ள இந்திய மண், நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி கே.ராஜா ஆகியோர் பேசினர். 
இதில், விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணைதுணைவேந்தர் எஸ்.நாராயணன், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரநாத் ராம்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com