நள்ளிரவில் தொடர் இடியுடன் கனமழை: மக்கள் அச்சம்

வேலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக பலத்த இடி சப்தம் உணரப்பட்டது. அத்துடன், கனமழையும் கொட்டியதால் பொதுமக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகினர்.


வேலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக பலத்த இடி சப்தம் உணரப்பட்டது. அத்துடன், கனமழையும் கொட்டியதால் பொதுமக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகினர்.
வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயில் நிலவிய நிலையில், இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இதையடுத்து நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் பலத்த இடி சப்தம் ஏற்பட்டது. இந்த இடி சப்தம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததுடன், கடுமையான மின்னல் தோன்றி, பலத்த மழையும் கொட்டியது.
சமீப காலங்களில் ஏற்படாத வகையில் வேலூர் பகுதியில் மட்டும் உணரப்பட்ட இந்த பலத்த, தொடர்ச்சியான இடி சப்தத்தால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சமடைந்தனர். மேலும், இந்த பலத்த இடியால் பெரும்பாலான வீடுகளில் மின்சாதனப் பொருள்களின் வயர்களின் இணைப்புகளை துண்டித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு பெய்த இடியுடன் கூடிய கனமழைக்கு வேலூர் அப்துல்லாபுரம் அருகே கீழ்மொணவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வேலாயுதத்தின் வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
இதேபோல், வேலூர் பகுதியில் வேறு ஏதும் அசம்பாவிதஙகள் நடந்துள்ளதா? என்றும் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்தவகையில், வெள்ளிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் 241 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக வேலூரில் 54 மி.மீ. மழை பதிவானதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆம்பூர்-38.8 மி.மீ, வாணியம்பாடி-15 மி.மீ, ஆலங்காயம்-32 மி.மீ, காவேரிபாக்கம்-3.4 மி.மீ, வாலாஜாபேட்டை-86 மி.மீ, திருப்பத்தூர்-16.4 மி.மீ, ஆற்காடு-34.2 மி.மீ, குடியாத்தம்-18 மி.மீ, மேல்மொணவூர்-20.6 மி.மீ மழை பதிவானது.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது.
மேலும், மாலை 6 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com