கன்டெய்னர் லாரியை கடத்தியதாக 4  இளைஞர்கள் கைது

ஆற்காடு அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்ற 4 இளைஞர்கள்  புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆற்காடு அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்ற 4 இளைஞர்கள்  புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 சென்னையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்குச் சொந்தமான கன்டெய்னர் லாரியில் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் சென்னையில் இருந்து ஒசூருக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றிச் செல்லப்பட்டன. லாரியை பாப்பிரெட்டி பட்டியைச் சேர்ந்த துரை (41) ஓட்டினார்.  ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  உணவகம் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சாப்பிட்டார். 
பின்னர், லாரியை எடுக்க முயன்றபோது, அங்கு வந்த 5 இளைஞர்கள் துரையை வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து அவர் ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார விசாரணை மேற்கொண்டனர். 
மேலும், நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார் உதவியுடன்  வேலூரை அடுத்த அப்துல்லா புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர். அப்போது ஒருவர் தப்பியோடி விட்டார்.  விசாரணையில், வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யாசின், ராம்குமார் (22), அசோக்குமார் (29), முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (21), விருதம்பட்டைச் சேர்ந்த  அன்பழகன்(24) ஆகிய 5 பேர் கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய யாசினை தேடி வருகின்றனர். கன்டெய்னர் லாரியையும் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com