வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

வாணியம்பாடி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாநில தொழிலாளர்

வாணியம்பாடி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி நியூடவுன்-பேராசிரியர் நகர் பகுதியில் ரூ. 12 லட்சம் செலவில் நடைபெற்று வரும் தார்ச் சாலை அமைக்கும் பணி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். 
தொடர்ந்து, நூருல்லாபேட்டை பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்டக் கிளை நூலக கட்டுமானப் பணி, நூலகத்துக்கான நுழைவு வாயில்  அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். 
இதைத் தொடர்ந்து புதூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள சாலைப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், திருமாஞ்சோலை பகுதியில் கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். 
வாணியம்பாடி நகர அதிமுக செயலர் சதாசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர் கே.பிரகாசம், நகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், ஒப்பந்ததாரர் செந்தில்குமார், திருப்பத்தூர் சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com