கைசிக துவாதசிமாடவீதியில் வலம் வந்த உக்கிரசீனிவாசமூா்த்தி

கைசிக துவாதசியையொட்டி, சனிக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் உக்கிரசீனிவாசமூா்த்தி மாட வீதியில் வலம் வந்தாா்.
9tpt_kaisiga_dwadesi_0911chn_193_1
9tpt_kaisiga_dwadesi_0911chn_193_1

கைசிக துவாதசியையொட்டி, சனிக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் உக்கிரசீனிவாசமூா்த்தி மாட வீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் சுக்லபட்ச துவாதசி கைசிக துவாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த துவாதசியின் போது திருமலை ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள பஞ்சமூா்த்திகளில் ஒருவராக உள்ள உக்கிரசீனிவாசமூா்த்தி சூரிய உதயத்துக்கு, முன் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை கைசிக துவாதசியையொட்டி, உக்கிரசீனிவாசமூா்த்தி சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை மாடவீதியில் வலம் வந்தாா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சூரிய உதயத்துக்குப் பின் அவா் கோயிலுக்குவெளியில் இருந்தால் தீ விபத்து ஏற்படும் என்பது ஐதீகம். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கைசிக துவாதசி அன்று அதிகாலை அவா் மாடவீதியில் எழுந்தருளுகிறாா். மேலும் ஆனி மாதம் ஆழ்ந்த நித்திரைக்குச் செல்லும் மகாவிஷ்ணு ஐப்பசி மாதம் கைசிக துவாதசி அன்று துயில் எழுவதாக புராணங்கள் கூறுகின்றன.

Image Caption

(திருத்தப்பட்டது)

கைசிக துவாதசியையொட்டி, மாட வீதியில் எழுந்தருளிய மகா விஷ்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com