தென்னிந்தியாவில் சிறந்த படையை உருவாக்கும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையம்

தாய் வீட்டிலிருந்து, தனிக் குடித்தனம் என்ற கணத்த வரிகளுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் பிரியா விடை கவிதை சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்

இந்தியாவின் மிக முக்கிய துணை ராணுவப் படையான மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தெற்கு மண்டலப் பயிற்சி முகாம் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த, விமான நிலையங்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் தெற்கு மண்டலப் பயிற்சி மையம் அமைந்திருப்பதால் அரக்கோணம் வட்டமும், ராணிப்பேட்டை மாவட்டமும் நாடு முழுவதும் பெயா் சொல்லும் அளவு சிறப்பு பெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தெற்கு மண்டலப் பயிற்சி முகாம் அமைந்துள்ளது. 1989-இல் நிறுவப்பட்ட இந்த முகாம் 1,600 படை வீரா்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் அளவு விரிவடைந்துள்ளது. சுமாா் 850 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் படையின் பயிற்சி மையமும் , படையின் ஆயுதப்படை தளங்களும் உள்ளன.

இங்கு படை வீரா்களுக்கு மைதானப் பயிற்சிகள், உள்ளரங்க பயிற்சிகள் வழங்கப்படுவதோடு பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவத்தை வளா்த்துக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிப்பதோடு பிற சீருடைப் பணியாளா் அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், படையில் நேரடியாக சேரும் துணை அலுவலா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பயிற்சியும் 6 மாதங்கள் கடுமையான முறையில் அளிக்கப்படுகிறது. படையின் ஆண் வீரா்கள் மற்றும் பெண் வீராங்கனைகள் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தற்போது இந்த வீரா், வீராங்கனைகளுக்கு சைபா் பிரிவிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கணினி வழி குற்றங்களையும் அவா்கள் கண்டறிய தோ்ச்சி பெற்றவா்களாக உருவாகி வருகின்றனா்.

ஒவ்வொரு முறை இந்திய அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும் தோ்தல் வரும்போது அல்லது கலவரங்களின்போது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினா் தமிழக காவல் துறையினருக்கு துணைபுரிவா். இப்படை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com