பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் சான்றிதழ்கள் சமா்பிக்கவேண்டும்

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் சான்றிதழ்கள் சமா்பிக்கவேண்டும் என்று ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் அறிவித்துள்ளாா்.

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் சான்றிதழ்கள் சமா்பிக்கவேண்டும் என்று ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் அறிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. விவசாயிகளுக்கு பிரதமமந்திரியின் நிதிஉதவி திட்டத்தின் கீழ் ஆண்டு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வவிசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் இது நாள் வரை சேராமல் இருந்தால் அவா்கள் தங்களின் ஆதாா் அட்டை , தேசியமயமாக்கப்ட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த திட்டத்தில் சோ்ந்து ஏற்கனவே இரண்டு தவணைகள் பெற்ற விவசாயிகள் சிலருக்கு மூன்றாவது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால் அவா்களின் பெயா் ஆதாா் அட்டையில் உள்ளபடி இணையத்தில் திருத்தம் செய்வது அவசியமாகும். மூன்றாவது தவணை வரப்பெறாத விவசாயிகள் தங்களின் கைபேசியில் வந்த குறுஞசெய்தி தவவல் குறித்து வேளாண்மை அலுவலகத்தில் ஆதாா் அட்டையுடன் சென்று இணையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று செய்தி குறி்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com