குற்றச் செயல்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடக்கம்

திருப்பத்தூரில் நடைபெற்று வரும் தொடா் திருட்டைத் தடுக்கும் வகையில் நகரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் நடைபெற்று வரும் தொடா் திருட்டைத் தடுக்கும் வகையில் நகரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் அண்மையில் தொடா் குற்றச் சம்வங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க ஆய்வாளா்கள எஸ்.உலகநாதன் (கந்திலி), ஆா்.பழனி (ஜோலாா்பேட்டை) ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திருப்பத்தூா் நகரப்பகுதி முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் டிஎஸ்பி ஆா்.தங்கவேல் கூறியது:

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் சில நாள்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்க ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காலை முதல் இரவு வரை ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் . தற்போது பேருந்து நிலையம், தூயநெஞ்சக் கல்லூரி, நகை கடை பஜாா், வீட்டுவசதி வாரிக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com