காஞ்சனகிரி சிவன் கோயிலில் பெளர்ணமி பூஜை

காஞ்சனகிரி சிவன் கோயிலில் பெளர்ணமி பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. 


காஞ்சனகிரி சிவன் கோயிலில் பெளர்ணமி பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. 
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை திருக்காஞ்சனகிரி மலை மீது காஞ்சனாதேவி உடனுறை காஞ்சனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 
இக்கோயிலில் ஆவணி மாத பெளர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகமும், தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை பௌர்ணமி பூஜையும் நடைபெற்றது. மேலும், இந்த மலைக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருமுருகன் கோயில், சப்த கன்னிமார்கள் கோயில், 1008 சுயம்பு லிங்கங்கள், விநாயகர் மற்றும் ஐயப்பன், ஆஞ்நேயர் சந்நிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
இதில் லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை காஞ்சனேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com