அரசு ஏகலைவா ஆங்கிலப் பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்படும்

ஏலகிரி மலை புங்கனூரில் இயங்கி வந்த அரசு ஏகலைவா ஆங்கிலப் பள்ளி மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளது.

ஏலகிரி மலை புங்கனூரில் இயங்கி வந்த அரசு ஏகலைவா ஆங்கிலப் பள்ளி மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில் அரசு ஏகலைவா ஆங்கிலப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
இங்கு கழிப்பறை மற்றும் போதிய இடவசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளி திருப்பத்தூர் அருகே வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையறிந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஏகலைவா பள்ளியை ஏலகிரி மலையிலேயே நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, சென்னை பழங்குடியின நல அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி பழங்குடியின நல இணை இயக்குநர் ஏலகிரி மலையில் உள்ள மங்கலம் பகுதியில் தனியார் கட்டடத்தில் பள்ளியை இயக்க ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 29-ஆம் தேதி வேலூர் துணை ஆட்சியர் (பழங்குடியினர் நல அலுவலர்) கிருஷ்ணன் ஏகலைவா பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் சிவலிங்கம் ஆகியோர் மங்கலம் பகுதியில் உள்ள கட்டடத்தை ஆய்வு செய்தனர். 
இதையடுத்து ஒரு வார காலத்துக்குள் இங்கு பள்ளி இயங்குவதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை அத்தனாவூர் கிராம சேவை மையக் கட்டடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com